Clicksia நண்பன்: 05/01/11

الأحد، 1 مايو 2011



   




NANPAN 
உலகில் உள்ள முக்கியமான பிரபலங்களை பற்றி தெரிந்து கொள்ள

உலகில் உள்ள முக்கிய பிரபலங்களின் முகங்களை நமக்கு நொடியில் தேடிக் கொடுக்க ஒரு தளம் உள்ளது. இத்தளத்தில் சென்று நமக்கு பிடித்த பிரபலங்களை எளிதாக தேடலாம்.
நமக்கு தேவையான புகைப்படங்களை கூகுள் Imagesல் சென்று தேடினால் பெரும்பாலும் நாம் விரும்பும் படங்கள் கிடைப்பதில்லை. தேவையில்லாத படங்கள் தான் முதலிடம் பிடிக்கிறது.
இதைத் தவிர்த்து நாம் தேடும் பிரபலங்களின் முகங்களை கொடுக்க ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்று நாம் தேட விரும்பும் பிரபலத்தின் பெயரை கொடுத்து Let’s Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்.
அதே திரையில் நமக்கு நாம் தேடிய பிரபலங்களின் முகங்களை வரிசையாக அழகாக நேர்த்தியாக கொடுக்கிறது இந்த தளம். கீபோர்டில் இருக்கும் வலது மற்றும் இடது பக்க அம்புக்குறியை அழுத்தி ஒவ்வொரு படங்களாக பார்க்கலாம்.
பிரபலங்கள் மற்றும் முக்கியத்தலைவர்களின் முகங்களை தேட இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.  http://www.ifacesearch.com/



   

உணவில் காரத்தை குறைத்தால் எடை குறையும்
[ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 11:26.31 மு.ப GMT ]
உணவில் சிவப்பு மிளகாய் தூளை மிதமாக சேர்த்துக் கொண்டால் பசி குறைந்து உணவின் அளவும் குறையும். அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம் என்று இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
பசி ஏற்பட்டால் அளவுக்கு அதிகமான அளவு உணவு சாப்பிடுவது வழக்கம். அதனால் உடல் எடை அதிகரித்து பல்வேறு நோய்கள் வந்து சேரும்.
பொதுவாக சதை போட விரும்பும் ஒல்லியானவர்கள் உணவுக்கு முன் பசியைத் தூண்டும் பானங்களை குடிப்பதுண்டு. அதற்கு நேர்மாறாக உடல் பருமனாக இருப்பவர்கள் உணவின் அளவைக் குறைக்க இயற்கையான வழி குறித்து இங்கிலாந்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
6 வாரங்கள் நடைபெற்ற இந்த ஆய்வில் சராசரி எடை கொண்ட 25 பேரில் மசாலா உணவு ரசிகர்கள், அதற்கு எதிரானவர்கள் என 2 குழுவினர் தெரிவு செய்யப்பட்டனர். மசாலா உணவு விரும்பிகளுக்கு 1.8 கிராமும், விரும்பாதவர்களுக்கு 0.3 கிராம் சிவப்பு மிளகாய் தூள் உணவுக்கு முன் தரப்பட்டது.
6 வாரங்களுக்கு பிறகு நடந்த சோதனையில் மிளகாய் தூள் குறைவாக சேர்த்தவர்களுக்கு பசி குறைந்ததும், அதிகம் சேர்த்தவர்களுக்கு பசி அதிகரித்ததும் தெரியவந்தது. பொதுவாக உடல் சூட்டை மிளகாய் தூள் அதிகரித்து அதிக கலோரிகளை இழக்கச் செய்வதால் அதிகமான அளவு பசி ஏற்படும். இதை மிளகாயில் உள்ள "கேப்சைசின்" என்ற பொருள் செய்கிறது.
மிளகாய் தூளின் அளவு குறைந்தால் பசி குறையும். அத்துடன் உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு முறை ஆகியவற்றின் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும் என்று லண்டன் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
by:- Admin