Clicksia நண்பன்: 04/30/11

السبت، 30 أبريل 2011

கோ
Appavi
ஜனநாயகத்தின் நான்காவது து£ணுக்கு கமர்ஷியல் பெயிண்ட் அடித்திருக்கிறார் கே.வி.ஆனந்த். அது கலர்ஃபுல் கலக்கலாக இருப்பதால் இனி அவரை 'கோ'.வி.ஆனந்த் என்றே கூட அழைக்கலாம்!
தின அஞ்சல் புகைப்படக்காரர் ஜீவா, தான் எடுக்கும் அதிரடி புகைப்படங்களால் நாட்டில் ஏற்படுத்தும் புரட்சிதான் கதை. அந்த புரட்சியால் நாட்டையே பிடிக்கும் அஜ்மல் நல்லவரா, கெட்டவரா? பத்திரிகையாளர்களுக்கு இந்த சமூகத்தின் மீது இருக்கிற அக்கறையும் கடமையும் என்ன? என்பதையெல்லாம் இதைவிட நுணுக்கமாகவும், வியாபார ரீதியாகவும் சொல்வதற்கு இன்னொருவர் வர வேண்டும். ஆனால் அவரும் கே.வி.ஆனந்தாகதான் இருப்பார்! தெளிக்கப்படும் 'இங்க்' போல தேவையில்லாத பல காட்சிகளை தானாகவே எரேஸ் செய்துவிடுகிறது மைண்ட்!
ஜீவாவின் முதல் காட்சியே அதிரடி அமர்க்களம். ஒரு பத்திரிகையாளனுக்கு எல்லாமே செய்தியாக தெரிய வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிற அந்த முதல் காட்சியில் தொடங்கி, நாட்டையே உலுக்கும் ஒரு பரபரப்பான சம்பவத்தை படமாக்கி நெட் வழியே அனுப்பும் கடைசி காட்சி வரை ஜீவாவின் ஐம்புலன்களும் நடித்திருக்கிறது. நாட்டில் திரியும் முரட்டு சிங்கங்களையெல்லாம் கோபப்படுத்தும் இவர் அலுவலகத்திற்குள் சாதாரணமாக அரட்டையடித்துக் கொண்டிருப்பது அழகு. பத்திரிகையாளர்களின் இயல்பு வாழ்க்கையை கன ஜோராக வெளிப்படுத்தியிருக்கிறார் ஜீவா.
பப்ளிஷரால் அவமானப்படுத்தப்படும் சக நிரூபி கார்த்திகாவுக்கு ஆதரவாக களம் இறங்கும் ஜீவா, எதிர்கட்சி தலைவரின் பால்ய விவாகத்தை படம் பிடிக்கிற அனுபவம் த்ரில்லிங்கானது. இடையிடையே வந்து ஜீவாவை அவஸ்தைப்படுத்தும் அந்த கழுதை கூட நமது பிராணனை சூடேற்றுகிறது!
தைரியசாலி நிருபராம் கார்த்திகா. கதையில் விடுங்கள். பாடல் காட்சிகளில் மலையுச்சி ஓரத்திலும், தொங்கு பாறை இடுக்கிலும் நின்று, படுத்து காதல் செய்யும் போது இவர் காட்டுகிற தைரியத்தைதான் தனியாக மெச்ச வேண்டும். சற்றே ஆண்மை கலந்த அழகு! அதுவே எலும்பு நொறுங்க பரவசப்படுத்துகிறது ரசிகர்களை.
சரக்கடித்த எலிபோல சைய் முய் என்று கத்திக் கொண்டு பியா பண்ணும் அமர்க்களங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கை பணத்தை செலவு பண்ணி ரசிக்கலாம். அவரது முடிவு கலங்க வைப்பதும் நிஜம். ஆனால் ஒரு பத்திரிகையாளரின் டிரஸ் கோட், பியாவால் அபாயகரமான அளவுக்கு மீறப்பட்டிருப்பதுதான் அநியாயம்!
அஜ்மல்... ஹ்ம்ம்ம். தமிழ்சினிமாவின் கேட்வாக் கதாநாயகன் அஜீத் என்றால், கிட்டதட்ட அதே அளவுக்கு 'வாக்'குகிறார் இவரும். இந்தியாவின் யங் சிஎம் என்ற திடீர் அந்தஸ்து ரசிகர்களின் மனதில் தைக்க நெடுநேரம் பிடிக்கிறது. அதற்குள் முடிந்துவிடுகிறது எல்லாமே!
இந்த படத்திற்கு ஏன் பிரகாஷ்ராஜ் என்ற கேள்வி ஏனோ வீட்டுக்கு வந்த பின்பும் தொடர்வது துரதிருஷ்டம். மற்றொரு கட்சி தலைவரான கோட்டா சீனிவாசராவ் வழக்கம் போல அமர்க்களம். தமிழ் பத்திரிகைதானடா இது. அப்புறம் எதுக்கு இங்கிலீஷ்? என்கிற அவரது கேள்வி சிரிப்போடு செருகப்பட்ட சதக்!
சீட்டோடு இறுக்கி முடிச்சு போடுகிறது ரிச்சர் எம்.நாதனின் கேமிரா என்றால், கவனத்தை சிதற விடாத 'லாக்' ஹாரிசின் இசை! லொகேஷனும் இசையும் நடன இயக்கமும் இணைந்து நடத்தியிருக்கிற மந்திர ஆட்டத்துக்கு மதி மயங்கி போகிறது தியேட்டர் மொத்தமும்!
பத்திரிகையாளன், நக்சல், புதிய அரசியல் தலைவன் இப்படி எல்லாருமே டுபாக்கூர் என்றால், எதிர்கால சந்ததி யாரைதான் நம்புவது? பதில் சொல்லுங்...கோ!

by:- Admin
புகைப்படத்துறையின் புதிய பரிணாமம் : சொக்க வைக்கும் (படங்கள் இணைப்பு)
இது ஒரு புகைப் படத்தை விட சற்று அதிகமானது. ஆனால் வீடியோக் காட்சியை விட கொஞ்சம் குறைவானது…உங்களது விஷேட நிகழ்வுகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு விஷேட புதிய கலையை இரண்டு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இவை அசைவுகளுடன் கூடிய படங்கள். இந்தப் புதிய புகைப்படக் கலையின் மூலம் எடுக்கப்படும் படங்கள் நிழற்படங்களைப் போன்று தான் இருக்கும்.

ஆனால் அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அசைவுகளைக் காணலாம். அந்த வினோதமான அசைவு நிச்சயம் உங்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும். ஜெமிபெக் மற்றும் அவரின் சகாவான கெவின் பேர்க் ஆகியோர் இணைந்து இந்த எனிமேஷன் போட்டோ கிராபியை உருவாக்கி உள்ளனர். ஒரு படத்தில் சன நெரிசல் மிக்க ஒரு வீதியில் ஒருவர் தனது பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.

இன்னொரு படத்தில் ஒரு சிற்றுண்டிச் சாலைக்கு வெளிப்பகுதியில் வாகனம் ஒன்று வேகமாகச் செல்வது சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு படத்தின் ஏதாவது ஒரு குறிப்பிட்டப் பகுதிதான் அசையும். ஆனால் அது நிச்சயம் பார்ப்பவர்களைக் கவரும், அவர்களின் கவனத்தையும் ஈர்க்கும். அது தான் இந்தப படக்கலையின் விஷேட அம்சம்.

தேவையான பக்கங்களை ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2011, 03:49.46 மு.ப GMT ]
நாம் கணணியில் வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது சில பக்கங்கள் நமக்கு தேவைப்படும். அதை அப்படியே ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு ஒரு அருமையான மென்பொருள் உள்ளது.
இந்த மென்பொருளின் மூலம் முழுத்திரை, குறிப்பிட்ட திரை, திரையில் குறிப்பிட்ட பகுதி மற்றும் மவுஸ் தெரிய வேண்டுமானால் அதனுடனும் எடுக்க முடியும்.
நிறுவிய பின் Trayயில் உள்ள ஐகானை வலது கிளிக் செய்தால் தோன்றும் திரையில் எந்தமாதிரி Screenshot எடுக்கவேண்டும் என்பதை தேர்வு செய்தால் அதன் போல் Screenshot எடுக்கப்பட்டு விடும்.
மேலும் keyboardல் உள்ள Prt Scr பட்டனை பயன்படுத்தி எளிமையாக கையாள முடியும். உதாரணமாக Prt Scr பட்டனை மட்டும் அழுத்தினால் திரையில் குறிப்பிட்ட பகுதியை எடுக்க முடியும்.
மேலும் Preferences என்பதை கிளிக் செய்து உங்கள் வசதிக்கேற்ப தேவையானவற்றை மாற்றி கொள்ளலாம். Screen Shot எடுத்த பின் மேலும் மாற்றங்கள் செய்ய விரும்பினாலும் செய்து கொள்ளலாம்.
உதாரணமாக வார்த்தைகள் சேர்க்க விரும்பினாலும் சேர்த்து கொள்ளலாம். இதனை இயக்குவது என்பது மிகவும் எளிது.