| எதிரியை சுட்டுக்கொல்லும் வண்டு-அதிசயம் ஆனால் உண்மை: (வீடியோ இணைப்பு) |
| புழு, பூச்சிகள், ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன. அதே சமயத்தில் ஒன்றிடம் இருந்து ஒன்று தப்பித்து வாழவும் இயற்கை அவற்றுக்கு வகை செய்திருக்கிறது. ஒவ்வொரு உயிரினத்துக்கும் நிறைய எதிரிகள் இருக்கின்றன. மனிதர்களைவிட பிராணிகள், பூச்சியினங்களின் வாழ்க்கைதான் போராட்டக் களமாக உள்ளது. இந்தப் பூச்சிகளுள் சிலந்தி, தன் இரையை மிகவும் தந்திரமாகப் பற்றுகிறது. வலையைப் பின்னிவிட்டு, எப்போது பூச்சி மாட்டிக்கொள்ளும் என்று சிலந்தி காத்திருக்கும். பின்னிய வலையில் பூச்சி வந்து மாட்டிக்கொண்டதும் ஒருவகை சிலந்தி, கப்பென்று பாய்ந்து கடித்து விடும். இந்த அவசர வகை சிலந்திக்கு `நெபிலியா’ என்று பெயர். சிலந்தி வலையில் அடிக்கடி அகப்பட்டுக் கொள்வது ஒரு வகைச் சில்வண்டு தான். சிலந்திகளிடம் இருந்து தப்பித்துக்கொள்ள இந்த வண்டுகளுக்கு ஒருவகை ஆற்றலை இயற்கை அளித்திருக்கிறது. இந்த வண்டுகளை `குண்டு வெடிக்கும் வண்டு’ என்று கூறுகிறார்கள். இந்த வண்டுகளின் வயிற்று அடிப்பாகத்தில் சிறிய சுரப்பி இருக்கிறது. அந்தச் சுரப்பியில் ஒரு வேதித் திரவமும், பிராண வாயுவும் சுரக்கின்றன. இந்த இரண்டும் சேர்ந்து வெடிக்கும் தன்மை கொண்டவை. சிலந்தி வலையில் இந்த வண்டு மாட்டிக்கொண்டதும், நெபிலியா வகைச் சிலந்தி அதைத் தின்ன உடனே பாய்ந்து போய் கவ்வும். ஆபத்தை அறிந்த வண்டு, தன் வயிற்றுப் பாகத்தைச் சிலந்தியின் பக்கம் திருப்பி, குறிபார்த்துச் சுரப்பியை வெடிக்கச் செய்யும். அந்த வெடிச் சத்தத்தை சிலந்தியால் தாங்க முடியாது. மேலும் காரமான ஒரு திரவமும் அதன் மீது பீய்ச்சப் படும். வெடிச்சத்தம், திரவ முழுக்கில் இருந்து சிலந்தி மீள்வதற்குள் அந்த வண்டு தப்பித்துப் போய்விடும். இந்த வகை ஆற்றல் இருப்பதால் `குண்டு வெடிக்கும் வண்டு’க்கு ஆபத்தோ, எதிரிகளோ அதிகம் இல்லை என்று சொல்லலாம். ஆனால், இதற்கும் ஓர் எதிரியை இயற்கை படைத்திருக்கிறது. இந்த வண்டை அவசரப்படாமல் சாமர்த்தியமாகப் பிடிக்கும் தன்மை கொண்ட இன்னொரு வகைச் சிலந்தி இருக்கிறது. அதற்கு `அர்கோபி’ என்று பெயர். |
الصفحات
السبت، 7 مايو 2011
الاثنين، 2 مايو 2011
பிரித்தானிய அரச குடும்பத்தின் திருமணத்தில் வேற்றுக் கிரகவாசிகள்(வீடியோ இணைப்பு)
Posted By king On May 1st 2011. Under விந்தை உலகம்
பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸின் திருமணத்தை காண்கின்றமைக்கு வேற்றுக் கிரகவாசிகள் வந்து இருக்கின்றனர் என்று நிபுணர்களால் சந்தேகிக்கப்படுகின்றது.அடையாளம் கண்டு பிடிக்க முடியாத பறக்கும் பொருட்கள் பல கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக ஆங்கில கால்வாய்க்கு மேலாக பறந்து திரிந்ததை பிரித்தானிய விமானிகள் அவதானித்து உள்ளனர்.
குறிப்பாக வெஸ்ட்மின்ஸ்ரர் மடத்துக்கு மேலான வான் பரப்பில் மர்மப் பொருள் ஒன்று பறந்து திரிந்ததற்கான தடயம் கிடைத்து உள்ளது.
பூமியில் இடம்பெறுகின்ற மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களை அவதானிக்கின்றமைக்கு வேற்றுக் கிரகவாசிகள் புறப்பட்டு வருகின்றமை பொதுவான விடயம் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
| பேஸ்புக்கின் புதிய வசதி: நாம் விரும்பும் இணைய பக்கங்கள் |
| [ செவ்வாய்க்கிழமை, 03 மே 2011, 04:03.12 மு.ப GMT ] |
இணையத்தில் உலாவும் போது கண்ணில் படும் தளம் நம்மை கவர்ந்தால் அதனை பேஸ்புக் உதவியோடு விருப்பமானதாக ஆக்கி கொள்ளலாம். பேஸ்புக் அறிமுகம் செய்த விருப்ப வசதி(லைக்) இதனை சாத்தியமாக்குகிறது. இப்படி தளங்களையும், இணைய பக்கங்களையும் விரும்புவதன் மூலம் அவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்பது விஷேசம். ஒரு விதத்தில் இது புக்மார்கிங் சேவை போல தான். இணையத்தில் உலாவும் போது கண்ணில் படும் இணையதளம் நம்மை கவர்ந்தால் அதனை உடனடியாக குறித்து வைத்து கொள்வோம் அல்லவா? இணைய யுகம் என்பதால் இப்படி தளங்களை குறித்து வைக்க காகிதத்தையோ நோட்டு புத்தகத்தையோ தேட வேண்டியதில்லை. இதற்காக என்றே புகமார்கிங் சேவைகள் இருக்கின்றன. இதே வசதியை பேஸ்புக் மிகவும் எளிமையாக்கி லைக் சேவையாக அறிமுகம் செய்தது. எந்த ஒரு இணைய பக்கம் பிடித்திருந்தாலும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள லைக் பட்டனை கிளிக் செய்து நமது விருப்பத்தை தெரிவிக்கலாம். இதன் விளைவாக இணையவாசிகள் அந்த தளம் பிடித்தமானதாக இருந்தால் விருப்ப பட்டனை கிளிக் செய்தாலே போதுமானது. அப்படியே அந்த தளம் அல்லது இணைய பக்கத்தை தங்கள் பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். அறிமுகம் செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே இந்த வசதி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தளங்களால் விரும்பி பயன்படுத்தப்பட்டது. இணையதளங்களை பொருத்தவரை இந்த வசதி சுலபமான விளம்பரமாக அமைந்தது. இணையவாசிகளை பொருத்தவரை தாங்கள் விரும்பும் பக்கத்தை பகிர்ந்து கொள்வதற்கான சுலபமான வழியாக இது அமைந்தது. ஆனால் இந்த லைக் சேவையில் உள்ள ஒரே குறைபாடு விருப்பம் தெரிவித்த பக்கங்களை சேமித்து வைப்பது சாத்தியமில்லை என்பது தான். எனவே எப்போதோ விரும்பினோமே என்று நினைத்து கோண்டு ஒரு பக்கத்தை தேட முற்பட்டால் அது சாத்தியம் இல்லை. இந்த குறையை போக்கும் வகையில் லைக் ஜர்னல் தளம் உதயமாகியுள்ளது. இந்த சேவையின் மூலமாக பேஸ்புக் பிரியர்கள் தாங்கள் விரும்பும் இணைய பக்கங்களை சேமித்து வைத்து கொள்லலாம். கருத்துக்கள் மற்றும் வீடியோவோடு ஒரே இடத்தில் வைத்து கொள்ளலாம். பின்னர் எப்போது தேவையோ அவற்றை தேடிப்பார்க்கலாம். இந்த இணைப்புகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம். ஆனால் ஒன்று மற்ற பேஸ்புக் சார்ந்த சேவை போல் இதனை பயன்படுத்த வேண்டும் என்றால் ஒருவரது பேஸ்புக் பக்கத்தினுள் நுழைவதற்கான அனுமதியை இந்த தளத்திற்கு வழங்க வேண்டும். |
الأحد، 1 مايو 2011
|
| உணவில் காரத்தை குறைத்தால் எடை குறையும் |
| [ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 11:26.31 மு.ப GMT ] |
பசி ஏற்பட்டால் அளவுக்கு அதிகமான அளவு உணவு சாப்பிடுவது வழக்கம். அதனால் உடல் எடை அதிகரித்து பல்வேறு நோய்கள் வந்து சேரும். பொதுவாக சதை போட விரும்பும் ஒல்லியானவர்கள் உணவுக்கு முன் பசியைத் தூண்டும் பானங்களை குடிப்பதுண்டு. அதற்கு நேர்மாறாக உடல் பருமனாக இருப்பவர்கள் உணவின் அளவைக் குறைக்க இயற்கையான வழி குறித்து இங்கிலாந்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 6 வாரங்கள் நடைபெற்ற இந்த ஆய்வில் சராசரி எடை கொண்ட 25 பேரில் மசாலா உணவு ரசிகர்கள், அதற்கு எதிரானவர்கள் என 2 குழுவினர் தெரிவு செய்யப்பட்டனர். மசாலா உணவு விரும்பிகளுக்கு 1.8 கிராமும், விரும்பாதவர்களுக்கு 0.3 கிராம் சிவப்பு மிளகாய் தூள் உணவுக்கு முன் தரப்பட்டது. 6 வாரங்களுக்கு பிறகு நடந்த சோதனையில் மிளகாய் தூள் குறைவாக சேர்த்தவர்களுக்கு பசி குறைந்ததும், அதிகம் சேர்த்தவர்களுக்கு பசி அதிகரித்ததும் தெரியவந்தது. பொதுவாக உடல் சூட்டை மிளகாய் தூள் அதிகரித்து அதிக கலோரிகளை இழக்கச் செய்வதால் அதிகமான அளவு பசி ஏற்படும். இதை மிளகாயில் உள்ள "கேப்சைசின்" என்ற பொருள் செய்கிறது. மிளகாய் தூளின் அளவு குறைந்தால் பசி குறையும். அத்துடன் உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு முறை ஆகியவற்றின் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும் என்று லண்டன் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர். |
السبت، 30 أبريل 2011
கோ


ஜனநாயகத்தின் நான்காவது து£ணுக்கு கமர்ஷியல் பெயிண்ட் அடித்திருக்கிறார் கே.வி.ஆனந்த். அது கலர்ஃபுல் கலக்கலாக இருப்பதால் இனி அவரை 'கோ'.வி.ஆனந்த் என்றே கூட அழைக்கலாம்! தின அஞ்சல் புகைப்படக்காரர் ஜீவா, தான் எடுக்கும் அதிரடி புகைப்படங்களால் நாட்டில் ஏற்படுத்தும் புரட்சிதான் கதை. அந்த புரட்சியால் நாட்டையே பிடிக்கும் அஜ்மல் நல்லவரா, கெட்டவரா? பத்திரிகையாளர்களுக்கு இந்த சமூகத்தின் மீது இருக்கிற அக்கறையும் கடமையும் என்ன? என்பதையெல்லாம் இதைவிட நுணுக்கமாகவும், வியாபார ரீதியாகவும் சொல்வதற்கு இன்னொருவர் வர வேண்டும். ஆனால் அவரும் கே.வி.ஆனந்தாகதான் இருப்பார்! தெளிக்கப்படும் 'இங்க்' போல தேவையில்லாத பல காட்சிகளை தானாகவே எரேஸ் செய்துவிடுகிறது மைண்ட்! ஜீவாவின் முதல் காட்சியே அதிரடி அமர்க்களம். ஒரு பத்திரிகையாளனுக்கு எல்லாமே செய்தியாக தெரிய வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிற அந்த முதல் காட்சியில் தொடங்கி, நாட்டையே உலுக்கும் ஒரு பரபரப்பான சம்பவத்தை படமாக்கி நெட் வழியே அனுப்பும் கடைசி காட்சி வரை ஜீவாவின் ஐம்புலன்களும் நடித்திருக்கிறது. நாட்டில் திரியும் முரட்டு சிங்கங்களையெல்லாம் கோபப்படுத்தும் இவர் அலுவலகத்திற்குள் சாதாரணமாக அரட்டையடித்துக் கொண்டிருப்பது அழகு. பத்திரிகையாளர்களின் இயல்பு வாழ்க்கையை கன ஜோராக வெளிப்படுத்தியிருக்கிறார் ஜீவா. பப்ளிஷரால் அவமானப்படுத்தப்படும் சக நிரூபி கார்த்திகாவுக்கு ஆதரவாக களம் இறங்கும் ஜீவா, எதிர்கட்சி தலைவரின் பால்ய விவாகத்தை படம் பிடிக்கிற அனுபவம் த்ரில்லிங்கானது. இடையிடையே வந்து ஜீவாவை அவஸ்தைப்படுத்தும் அந்த கழுதை கூட நமது பிராணனை சூடேற்றுகிறது! தைரியசாலி நிருபராம் கார்த்திகா. கதையில் விடுங்கள். பாடல் காட்சிகளில் மலையுச்சி ஓரத்திலும், தொங்கு பாறை இடுக்கிலும் நின்று, படுத்து காதல் செய்யும் போது இவர் காட்டுகிற தைரியத்தைதான் தனியாக மெச்ச வேண்டும். சற்றே ஆண்மை கலந்த அழகு! அதுவே எலும்பு நொறுங்க பரவசப்படுத்துகிறது ரசிகர்களை. சரக்கடித்த எலிபோல சைய் முய் என்று கத்திக் கொண்டு பியா பண்ணும் அமர்க்களங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கை பணத்தை செலவு பண்ணி ரசிக்கலாம். அவரது முடிவு கலங்க வைப்பதும் நிஜம். ஆனால் ஒரு பத்திரிகையாளரின் டிரஸ் கோட், பியாவால் அபாயகரமான அளவுக்கு மீறப்பட்டிருப்பதுதான் அநியாயம்! அஜ்மல்... ஹ்ம்ம்ம். தமிழ்சினிமாவின் கேட்வாக் கதாநாயகன் அஜீத் என்றால், கிட்டதட்ட அதே அளவுக்கு 'வாக்'குகிறார் இவரும். இந்தியாவின் யங் சிஎம் என்ற திடீர் அந்தஸ்து ரசிகர்களின் மனதில் தைக்க நெடுநேரம் பிடிக்கிறது. அதற்குள் முடிந்துவிடுகிறது எல்லாமே! இந்த படத்திற்கு ஏன் பிரகாஷ்ராஜ் என்ற கேள்வி ஏனோ வீட்டுக்கு வந்த பின்பும் தொடர்வது துரதிருஷ்டம். மற்றொரு கட்சி தலைவரான கோட்டா சீனிவாசராவ் வழக்கம் போல அமர்க்களம். தமிழ் பத்திரிகைதானடா இது. அப்புறம் எதுக்கு இங்கிலீஷ்? என்கிற அவரது கேள்வி சிரிப்போடு செருகப்பட்ட சதக்! சீட்டோடு இறுக்கி முடிச்சு போடுகிறது ரிச்சர் எம்.நாதனின் கேமிரா என்றால், கவனத்தை சிதற விடாத 'லாக்' ஹாரிசின் இசை! லொகேஷனும் இசையும் நடன இயக்கமும் இணைந்து நடத்தியிருக்கிற மந்திர ஆட்டத்துக்கு மதி மயங்கி போகிறது தியேட்டர் மொத்தமும்! பத்திரிகையாளன், நக்சல், புதிய அரசியல் தலைவன் இப்படி எல்லாருமே டுபாக்கூர் என்றால், எதிர்கால சந்ததி யாரைதான் நம்புவது? பதில் சொல்லுங்...கோ! by:- Admin |
| புகைப்படத்துறையின் புதிய பரிணாமம் : சொக்க வைக்கும் (படங்கள் இணைப்பு) |
| இது ஒரு புகைப் படத்தை விட சற்று அதிகமானது. ஆனால் வீடியோக் காட்சியை விட கொஞ்சம் குறைவானது…உங்களது விஷேட நிகழ்வுகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு விஷேட புதிய கலையை இரண்டு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இவை அசைவுகளுடன் கூடிய படங்கள். இந்தப் புதிய புகைப்படக் கலையின் மூலம் எடுக்கப்படும் படங்கள் நிழற்படங்களைப் போன்று தான் இருக்கும். ஆனால் அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அசைவுகளைக் காணலாம். அந்த வினோதமான அசைவு நிச்சயம் உங்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும். ஜெமிபெக் மற்றும் அவரின் சகாவான கெவின் பேர்க் ஆகியோர் இணைந்து இந்த எனிமேஷன் போட்டோ கிராபியை உருவாக்கி உள்ளனர். ஒரு படத்தில் சன நெரிசல் மிக்க ஒரு வீதியில் ஒருவர் தனது பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு படத்தில் ஒரு சிற்றுண்டிச் சாலைக்கு வெளிப்பகுதியில் வாகனம் ஒன்று வேகமாகச் செல்வது சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு படத்தின் ஏதாவது ஒரு குறிப்பிட்டப் பகுதிதான் அசையும். ஆனால் அது நிச்சயம் பார்ப்பவர்களைக் கவரும், அவர்களின் கவனத்தையும் ஈர்க்கும். அது தான் இந்தப படக்கலையின் விஷேட அம்சம். ![]() ![]() ![]() |
| தேவையான பக்கங்களை ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2011, 03:49.46 மு.ப GMT ] |
இந்த மென்பொருளின் மூலம் முழுத்திரை, குறிப்பிட்ட திரை, திரையில் குறிப்பிட்ட பகுதி மற்றும் மவுஸ் தெரிய வேண்டுமானால் அதனுடனும் எடுக்க முடியும். நிறுவிய பின் Trayயில் உள்ள ஐகானை வலது கிளிக் செய்தால் தோன்றும் திரையில் எந்தமாதிரி Screenshot எடுக்கவேண்டும் என்பதை தேர்வு செய்தால் அதன் போல் Screenshot எடுக்கப்பட்டு விடும். மேலும் keyboardல் உள்ள Prt Scr பட்டனை பயன்படுத்தி எளிமையாக கையாள முடியும். உதாரணமாக Prt Scr பட்டனை மட்டும் அழுத்தினால் திரையில் குறிப்பிட்ட பகுதியை எடுக்க முடியும். மேலும் Preferences என்பதை கிளிக் செய்து உங்கள் வசதிக்கேற்ப தேவையானவற்றை மாற்றி கொள்ளலாம். Screen Shot எடுத்த பின் மேலும் மாற்றங்கள் செய்ய விரும்பினாலும் செய்து கொள்ளலாம். உதாரணமாக வார்த்தைகள் சேர்க்க விரும்பினாலும் சேர்த்து கொள்ளலாம். இதனை இயக்குவது என்பது மிகவும் எளிது. |
| தேவையான பக்கங்களை ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2011, 03:49.46 மு.ப GMT ] |
இந்த மென்பொருளின் மூலம் முழுத்திரை, குறிப்பிட்ட திரை, திரையில் குறிப்பிட்ட பகுதி மற்றும் மவுஸ் தெரிய வேண்டுமானால் அதனுடனும் எடுக்க முடியும். நிறுவிய பின் Trayயில் உள்ள ஐகானை வலது கிளிக் செய்தால் தோன்றும் திரையில் எந்தமாதிரி Screenshot எடுக்கவேண்டும் என்பதை தேர்வு செய்தால் அதன் போல் Screenshot எடுக்கப்பட்டு விடும். மேலும் keyboardல் உள்ள Prt Scr பட்டனை பயன்படுத்தி எளிமையாக கையாள முடியும். உதாரணமாக Prt Scr பட்டனை மட்டும் அழுத்தினால் திரையில் குறிப்பிட்ட பகுதியை எடுக்க முடியும். மேலும் Preferences என்பதை கிளிக் செய்து உங்கள் வசதிக்கேற்ப தேவையானவற்றை மாற்றி கொள்ளலாம். Screen Shot எடுத்த பின் மேலும் மாற்றங்கள் செய்ய விரும்பினாலும் செய்து கொள்ளலாம். உதாரணமாக வார்த்தைகள் சேர்க்க விரும்பினாலும் சேர்த்து கொள்ளலாம். இதனை இயக்குவது என்பது மிகவும் எளிது. |
الثلاثاء، 26 أبريل 2011
السبت، 15 يناير 2011
அணுசக்தி பேச்சுவார்த்தை மேற்கத்திய நாடுகளுக்கு இறுதி வாய்ப்பு
- ஈரான்
அடுத்த வாரம், துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் நடக்கும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை மேற்கத்திய நாடுகளுக்கு அளிக்கப்படும் இறுதி வாய்ப்பு என்று ஈரான் கூறியுள்ளது.
ஈரானின் அணுசக்தி தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சந்தே கம் கொண்டுள்ளன. ஆனால் தனது அணுசக்தி ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்படும் என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த 2009ல் இது பற்றி நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடை ந்ததை அடுத்து அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இதனால், மீண்டும் பேச்சுவார்த்தைக் கிணங்க வேண்டிய சூழல் ஈரானுக்கு ஏற்பட்டது. இதையடுத்து, இம்மாதம் 21 மற்றும் 22ம் திகதிகளில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் ஈரானுக்கும், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் ஜெர்மனி ஆகியவற்றுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இது குறித்து சர்வதேச அணுசக்தி முகவருக்கான ஈரானின் தூதர் அலி அஸ்கர் சுல்தானியா கூறுகையில், டெக்ரானில் உள்ள அணு உலையில் தயாரிக்கப்படும் யுரேனியம், மருத்துவப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். இது குறித்து நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தால் மேற்கத்திய நாடுகளுக்கு இதுவே இறுதி வாய்ப்பாக அமையும் இதையடுத்து, மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஈரான் பாராளு மன்றம் அனுமதி அளிக்காது என்றார்.
கிழக்கு பிரதேசத்துக்கு 345 மெ. தொ. உணவு நேற்று அனுப்பி வைப்பு
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு வழங்கவென இந்திய அரசாங்கத்தின் முதல் தொகுதி நிவாரணப் பொருள்கள் நேற்று (14) விமானம் மூலம் கொண்டுவரப் பட்டன.
110 மில்லியன் ரூபாய் பெறுமதியான 25 மெட்ரிக் தொன் உணவுப் பொருள்கள் விசேட விமானத்தின் மூலம் நேற்றுப் பகல் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தது.
இவற்றை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்திய அரசின் சார்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா நிவாரணப் பொருள்களை அமைச்சர்களிடம் ஒப்படைத்தார்.
பருப்பு, சீனி, போர்வை, தண்ணீரை சுத்தமாக்கும் மாத்திரைகள், குடிநீர், பாய் போன்றவை அடங்கிய இந்த முதல் தொகுதி நிவாரணப் பொருள்களை விமானப் படையினர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எடுத்துச் சென்றதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் கீழ் இணைந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 320 மெட்ரிக் தொன் உலருணவு நிவாரணப் பொருள்களும் நேற்று அனுப்பிவைக்கப்பட்டதாக அவ்வமைச்சின் அதிகாரி கூறினார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் உலக உணவுத் திட்டத்தின் லொறிகளில் நேற்று முதல் உலருணவுப் பொருள்கள் அனுப்பும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 50.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த நிவாரணப் பொருள்களை விநியோகிப்பதற்கு மாவட்டச் செயலாளர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 318, 500 பேருக்கு விநியோகிக்கவென 63 மெட்ரிக் தொன் உலருணவுப் பொருள்களும், அம்பாறையில் பாதிக்கப்பட்ட 153, 500 பேருக்கு 191 மெட்ரிக் தொன்களும், திருகோணமலை மாவட்டத்தில் 40 ஆயிரம் பேருக்கு 50 மெட்ரிக் தொன்களும் பொலன்னறுவை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 13 ஆயிரம் பேருக்கு 16 மெட்ரிக் தொன்களுமாக அரிசி, சீனி, பருப்பு, மரக்கறி எண்ணெய் ஆகிய பொருள்கள் அடங்கிய 320 மெட்ரிக் தொன் உலருணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரி கூறினார்.
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த நிவாரணப் பொருட்களில் முதற் கட்டமாக 1280 கிலோ கிராம் உணவுப் பொருட்கள் விமானப் படையின் ஐ. எல். 76 ரக விமானம் மூலம் அனுப்பப்பட்டதோடு ஏனைய உணவுப் பொருட்கள் கட்டம் கட்டமாக பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.
இந்திய நிவாரணப் பொருட்களைஇந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரிடம் கையளித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடொன்று வழங்கிய முதலாவது நிவாரண உதவி இதுவாகும்.
இதேவேளை விமானப்படையின் எம். ஐ. 17 ரக மற்றும் பெல் 212 ரக ஹெலிகொப்டர்கள் இரண்டு மற்றும் ஏ. என். 32 ரக விமானம் என்பன பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.
இந்த விமானங்களினூடாக நேற்று மட்டக்களப்பிற்கு 1038 கிலோ கிராமும், சேருநுவரவுக்கு 800 கிலோ கிராமும், கல்லாறுக்கு 3333 கிலோ கிராமும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இலங்கையில் ‘லா-நினா’- கடும் குளிர்
இலங்கையில் கடந்த சில தினங்களாக வெப்ப நிலையில் சடுதியான தளர்வு ஏற்பட்டு அசாதாரனமான முறையில் கடும் குளிர் நிலவுவதுடன், பனிமூட்டமும் காணப்படுகின்றது. இவ்வாறான ஒரு நிலைக்கு சுமார் 82 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை உட்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நுவரெலியா, கண்டி போன்ற மத்திய மாகாணப்பிரதேசங்களில் மாத்திரம் அன்றி கொழும்பு, காலி, மாத்தறை, அம்பாறை, மட்டக்கப்பு. அனுராதபுரம் ,யாழ்ப்பாணம் என தீவின் சகல பாகங்களிலும் மக்கள் கடும் குளிரையும், பனி மூட்டம் காரணமாக புகார் போன்ற மப்பும் மந்தாரமுமான ஒரு நிலையினையும் முழு நாளும் அனுபவித்து வருகின்றனர். அத்தோடு கிழக்கு மாகாணம் சார்ந்து தாழ் அமுக்கம் நிலை கொண்டு விரிவடைந்துள்ளதனால் வழமைக்கு மாற்றமான முறையில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்காற்றினால் தொடர்ச்சியான மழைவீழ்சிசயையும், அதன் காரணமாக கிழக்ககு மாகாணத்தில் சுமார் 100 வருடங்களுக்கு பிறகு 300 மி.மீற்றர்களைத் தாண்டிய (341மி.மீ.)மழை வீழ்ச்சி கிடைக்கப் பெற்று பெரு வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. மழை வீழ்ச்சியானது வடமத்திய மற்றும் மத்திய மாகாணத்திற்கும் அதிகளவில் கிடைக்கப் பெற்றதுடன் மத்திய மலை நாட்டில் பரவலாக சுமார் 100 இற்கும் மேற்பட்ட நில சரிவுகளும் நிகழ்ந்துள்ளன. மேற்குறிப்பிட்ட கனத்த மழை, வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக சுமார் 11 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 2இ 60 000 பேர் இடம் பெயர்ந்தும் உள்ளனர். இந்நிலை இலங்கையில் மாத்திரம் அன்றி அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் நகர வலயம், பிலிபைன்ஸ், பிரேஸிலின் ரியோடிஜெனரோ மற்றும் ஸாஓபோலோ நகர வலயங்கள்; என்பனவும் வெள்ளத்தில் மூழ்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நிலவும் கடும் குளிருக்கு லா-நினா காரணமாக இருப்பதுடன், அதிகரித்த மழை வீழ்ச்சி, வெள்ளம், மண்சரிவு என்பனவற்றிற்கு வடகீழ் பருவக்காற்று, வளிமண்டல குழப்பங்கள் (அயன குழப்பங்கள்- மற்றும் காலநிலை மாற்றம் என்பன காரணங்களாக இருக்கின்றன. பொதுவாக மக்கள் வளிமண்டல குழப்பங்கள், காலநிலை மாற்றம் தொடர்பாக அறிந்து வைத்துள்ளதால் அவற்றினை மிக சுருக்கமாகவும், பொதுமக்களுக்கு பரீட்ச்சயமில்லாத எல்-நினோ பற்றியும் அதனைத் தொடர்ந்து வரும் லா-நினா பற்றியும் விரிவாக நோக்கலாம். பிரபஞ்சத்தில் அறியப்பட்ட உயிரின மண்டலமான எமது பூமி தோன்றிய காலம் முதல் பூமிக்கான வளிமண்டல வாயுக்கள், அதன் கட்டமைப்பு என்பன மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துள்ளன. இதே போன்று பூமியின் காலநிலையும் அது தோன்றிய காலம் முதல் படிப்படியாக நீண்ட கால அடிப்படையில் இயற்கையான முறையில் மாற்றம் கண்டு வந்துள்ளது. ஆனால் இன்றய நிலையில் இணைய தளங்கள் உட்பட பொதுசன தொடர்பு சாதனங்களில் ‘காலநிலை மாற்றம்’ பற்றிய தரவுக்கள் வெளியிடுகின்றன. இந்த காலநிலை மாற்றமானது வரலாற்று ரீதியிலான காலநிலை மாற்றத்திலிருந்து முழுமையாக வேறுபட்டதாகும். குறிப்பாக 1970 ஆம், 1980 ஆம் ஆண்டுகளைத் தொடந்த பலராலும் பேசப்பட்டு வரும் சடுதியான காலநிலை மாற்றத்திற்கு அடிப்படைக் காரணம் மனித செயல்பாடுகளாகும . அதாவது கைத் தொழில் புரட்சியைத் தொடர்ந்து ஆரம்பித்து இரண்டாம் யுத்தத்துடன் படிப்படியாக அதிகரித்த பச்சை வீட்டு வாயுக்களின் வெளியேற்றமும் அதனால் ஆன பூகோள ரீதியியலான பச்சை வீட்டு விளைவைத் தொடர்ந்து ஏற்பட்டு வரும் பூகோள வெப்பமடைவும் அதன் காரணமான காலநிலை மாற்றமும் ஆகும். எனவே கடந்த 30 - 40 வருடங்களாக ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்திற்கு மனித செயற்பாடுகளே அடிப்படைக் காரணமாகும். காலநிலை மாற்றம் காரணமாக பூகோள ரீதியில் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு கிடைக்க வேண்டிய சாதாரன மழை வீழ்ச்சி, வெப்பநிலை என்பதற்குப்பதிலாக காலம் மாறிய தொடர்ச்சியான கனத்த மழை, சூறாவளிகள், டோனாடோஸ், அதிகரித்த இடி-மின்னல் என்பன அசாதாரன முறையில் ஏற்பட்டு பெரு வெள்ளம், பாரிய நிலச்சரிவுகள் போன்ற அனர்த்தங்கள் எற்படக்காரணமாகின்றன. அத்தோடு அகோர வெப்பம், மணற்பயல், காட்டுத்தீ, முனைவில் உள்ள பனிப்படலங்கள் கரைதல், சமுத்திர வெப்ப அதிகரிப்பால் கடல் மட்டம் உயர்தல் போன்ற பாதிப்புக்களும் ஏற்படுகின்றன. உண்மையில் சாதாரண மழைவீழ்ச்சியினால் மனிதனும் ஏஏனைய உயிரினங்களும், எமது சுற்றுச் சூழலும் சபீட்சம் அடைவதற்குப்பதிலாக வேறுப்ட பாதிப்புக்களுக்கு உட்படக்கூடிய நிலையில் இருப்பதுடன், சாதாரன பொதுவான வெப்பநிலை காரணமாக தாவர வளர்ச்சி, உற்பத்தி அதிகரிப்பு என்பதற்குப்பதிலான அகோர வெப்பநிலை காரணமாக உயிரினங்கள் பாதிகப்பட்டு வருவதுடன், தாவரங்கள் கருகி வறுமை, பசி, பட்டினிக்கும் காரணமாகின்றது. எல்நினோ பூகோளரீதியிலான சமுத்திர மேற்பரப்;பு வெப்பநிலை (மாற்றம்) அதிகரிப்பில் எல் - நினோ வின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகவும், குறைந்தளவான கால இடைவெளிக்குள் அடிக்கடி ஏற்பட்டு சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலையில் செல்வாக்குச் செலுத்தி வரக் கூடிய ஒன்றாகவும் காணப்படுகின்றது. குறிப்பாக எல்-நினோவானது சரிசமமான கால இடைவெளில் அன்றி சடுதியாக ஆனால் வேறுபட்ட அளவுகளில் குறிப்பிட்ட சமுத்திர பிரதேசத்திற்கான குறிப்பிட்ட காலத்திற்கான சார்பளவில் சற்று அசாதாரண ஓரளவு வெப்பநிலையுடன் கூடிய (காலநிலை) நிலைமையாகவே இது சமுத்திரப்பரப்புக்களில் காணப்படுகின்றது. உதாரணணமாக ஒவ்வொரு வருடமும் பிரதேசரீதியாகவும், காலரீதியாகவும், உலகில் நிலவும் வசந்த காலம், கோடைக்காலம், இலையுதிர் காலம், மாரி காலம் என்பதைப் போன்ற ஒன்றே பல வருட இடை வெளியில் ஏற்படும் இந்த எல் - நினோவும் காணப்படுகின்றது. பொதுவாக எல் - நினோ நிலைமையானது 2 வருடங்கள் முதல் 7 வருட இடைவெளிக்குள் உருவாகக் கூடியதாக உள்ளது. அத்தோடு அது இரண்டு முதல் மூன்று வருடங்கள் வரை நிலை பெற்று சாதாரண காலநிலையில் பல மாற்றங்களை தோற்றுவிக்கக் கூடியதாகவும், உலகின் வேறுபட்ட பிரதேசங்களில் வேறுபட்ட காலநிலை சார்ந்த அசாதாரண நிலைமைகளைத் தோற்றுவிக்கக் கூடியதாகவுமுள்ளது. இதனாலேயே ஒரே காலப்பகுதியில் இந்தியா, மலேசியா, இந்தோனேசியாவில் அகோர வெப்பம், அதே போல் பேரு ஈக்குவடோரில் அதிக வெப்பம் மற்றும் சிறிய கால இடைவெளிக்குள் பங்களாதேசஷில் வெள்ளம், ஐரோப்பாவில் கடும் குளிருடன் கூடிய பனிப்புயல், தென்னாபிரிக்க நாடுகளில் அகோர வரட்சி, அவுஸ்திரேலியாவில் கடும் வரட்சியுடன் கூடிய காட்டுத் தீ, கிழக்கு பசுபிக் நாடுகளில் சூறாவளி என உலகில் ஒரே காலப்பகுதியில் ஒரே அகலக் கோட்டு நாடுகளில் வௌ;வேறு ஆனால் அசாதாரண காலநிலை நிலைமைகள் ஏற்படக் கூடியதாகவுள்ளது. பொதுவாக குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் சாதாரண கடல் நீர் வெப்பநிலை, அப்பிரதேச காலநிலையின் சாதாரண போக்கிற்கு மாற்றமாக அதிக வெப்பநிலை, கடல் மேற்பரப்;பு நீர் வெப்பநிலை அதிகரிப்பு என்பன சுமார் இரண்டு வருடங்கள் முதல் மூன்று வருடங்கள் வரை நிலை பெற்றால் நாம் அதை எல் - நினோ நிலைமை எனக் கண்டறிய முடியும். குறிப்பாக குளிரனா கடல் நீரோட்டமான ‘கம்போல்ட்’ குளிர் நீரோட்டம் அதிகளவு ஆழத்தோடு, பிலாங்டன் மீன் உணவையும் தன்னகத்தே கொண்டு மேல் எழுந்து தென் அமெரிக்க மேற்கு கரையேரத்தை அண்டி வடக்கு நோக்கி சென்று மத்திய கோடடை அடைந்ததும் பசுபிக்ககை ஊடறுத்து மேற்காக திரும்பிவிடுவது சாதாரண நிகழ்வாகும். இதனை விளக்கமாகக் கூறுவதாயின் கிழக்கு பசுபிக், தென்னமெரிக்க நாடுகளான ஈக்குவடோர், பேரு மற்றும் சிலி போன்ற நாடுகள் சார்ந்த பசுபிக் சமுத்திரப் பகுதியிலிருந்து மத்திய கோட்டுப் பக்கம் சார்ந்து மேற்கு நோக்கி வீசும் வியாபாரக் காற்றானது ஈக்குவடோர், பேரு மற்றும் சிலி சார்ந்த பசுபிக் சமுத்திர மேற்பரப்பில் சாதாரணமாக நிலவும் சாதாரண வெப்ப நீரினை பசுபிக்கின் மேற்குக் கரை நாடகளான அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளது கரைப் பகுதிக்கு நகர்த்தி விடும். இதனால் சாதாரண காலநிலை நிலவும் காலப்பகுதிகளில் பசுபிக்கின் கிழக்குக் கரை நாடுகளான பேரு மற்றும் சிலி போன்ற நாடுகளது கரையோரங்களிலும் அதன் தாக்கம் காரணமாக உள்நாட்டிலும் குளிர்ச்சியான நிலைமை காணப்படும். இதே காலப்பகுதியில் மேற்கு பசுபிக் கரையோர அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஒப்பீட்டளவில் சமுத்திர் நீர்ப்பரப்பு வெப்பமானதாக (சாதாரண நிலைமை) காணப்படும். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் லா-நினா பற்றி நோக்கும் போது குறிப்பாக ஒரு நாட்டின் காலநிலையினைத் தீர்மானிப்பதில் கடலின் அண்மை செய்மை, வெப்ப நீரோட்டங்கள் என்பனவும் ஏனைய பல காரணங்களுடன் முக்கியம் பெருகின்றன. இந்த வகையில் இங்கிலாந்து மற்றும் நோர்வே போன்ற நாடுகளில் மக்கள் வாழக்கூடிய வகையில் வாய்ப்பான சுவாத்தியம் நிலவுவதற்கு அடிப்படைக்காரணம் அந்நாடுகளுக்கு அருகாமையில் சமுத்திரப் பரப்புக்களில் ஓடும் வெப்பமான குடா நீரோட்டமாகும். ஆனால் அதே அகலக் கோடுகளில் இருக்கும் ஸைபீரியப்பகுதியில் தொடர்ந்து குளிர் நிலவுகின்றது. அதாவது பரப்பில் பெரியநாடுகளில் கூட சமுத்திர நீரின் வெப்ப, குளிர்த்தன்மையின் செல்வாக்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இலங்கைத் தீவானது உலக சமுத்திரப்பரப்புக்களுடன் ஒப்பிடும் போது கிழக்கு மேற்காக சிறியளவு தூரத்தைக் கொண்ட ஒரு நாடாகும். இதனால் லா-நினா காரணமாக சமுத்திர நீர் தூர இடங்களில் குளிர்ச்சியடைந்நதாலும் இதன் செல்வாக்கு இலங்கையில் இருக்கும். அத்தோடு உலக ரீதியல் தொடர்ந்தும் அதிக குளிர்ச்சியை அனுபவித்து வரும் ஸைபீரியப் பகுதியிலிருந்தான அதிகுளிர் காற்றுக்களின் செல்வாக்கிற்கு உட்படக் கூடிய வாய்ப்புக்கள் இலங்கைக்கு அதிகம் காணப்படுவதனால் தொடர்ச்சியான குளிர்ச்சுவாத்தியமும், பனி மூட்டத்துடன் கூடிய நிலையும் உள்வாங்கப்படுள்ள அசாதாரண நிலையில் இலங்கை காணப்படுகின்றது. இதனால் இலங்கையில் குறிப்பிட்ட இந்த காலத்திற்குறிய குளிர்ச்சி மற்றும் லா-நினாவின் தாக்கம் காரணமாக தீவின் குறிப்பிட்ட சில நகரங்கள் தவிர அனேக நகர்களில் வெப்பநிலை 200 ஊ யை விட குறைவாக காணப்படுவது குறிப்பிட்த்தக்கது. குறிப்பாக இலங்கையில் லா-நினாவின் செல்வாக்கு 10 – 25 நாட்கள் வரை செல்வாக்கு செலுத்தக் கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்டாலும் இலங்கையில் ஜனவரி இறுதி வாரத்திற்கு முன்னர் படிப்படியாக குளிர்குறைந்து சாதாரண நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. எம்.ஏ. எம். இஸ்திகார், சிரேஷ்ட விரிவுரையாளர் புவியியல் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். _ |
| இருபது-20: 2 ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி | |
இதன் மூலம் தொடர்ந்து 8 இருபது ஓவர் போட்டிகளில் வென்று சாதனை படைத்திருந்த இங்கிலாந்து வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. நாணயசுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா இருபது ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களை பெற்றது. அவ்வணி சார்பில் பின்ச் 53 ஓட்டங்களை பெற்றார். அடுத்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. இதனால் 2 போட்டிகள் கொண்ட தொடரும் 1 - 1 என்று சமநிலையில் முடிந்தது. இங்கிலாந்து அணி சார்பில் பெல் அதிகபட்சமாக 39 ஓட்டங்களை பெற்றார். அவுஸ்திரேலிய அணி சார்பில் ஜொன்சன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். , , , , , , , |
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ
கேட்கிறாள் எங்கும் இருகிறாளோ
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால்
நடக்கிறாள் நெஞ்சை கிழிகிறாளோ
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்
என்னை ஏதோ செய்தால் ...
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ
கேட்கிறாள் எங்கும் இருகிறாளோ
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால்
நடக்கிறாள் நெஞ்சை கிழிகிறாளோ
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்
என்னை ஏதோ செய்தால் ...
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என் வீடு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்த்தேன்
கண்ணாடி வளையலை போலே
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்
கால்தீண்டும் கொலுசில் என்னோட மனசை
சேர்த்து கோர்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல்கிடப்பேன்
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை ஏதோ செய்தால் ...
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்த்தேன்
கண்ணாடி வளையலை போலே
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்
கால்தீண்டும் கொலுசில் என்னோட மனசை
சேர்த்து கோர்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல்கிடப்பேன்
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை ஏதோ செய்தால் ...
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ...
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ...
நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பாள்
பார்காத நேரம் என்னை பார்ப்பாள்
என்னை பார்த்து சிரிப்பாள்
நான் பார்த்தால் மறைப்பாள்
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பாள்
பெண் நெஞ்சம் புத்தி அதை எப்போதும்
யாரும் யாரும் அறிந்ததே இல்லை
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்
பெண்கள் மதிப்பதே இல்லை
மனம் நொந்த பிறகே
முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்
என்னை ஏதோ செய்தாள்....
பார்காத நேரம் என்னை பார்ப்பாள்
என்னை பார்த்து சிரிப்பாள்
நான் பார்த்தால் மறைப்பாள்
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பாள்
பெண் நெஞ்சம் புத்தி அதை எப்போதும்
யாரும் யாரும் அறிந்ததே இல்லை
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்
பெண்கள் மதிப்பதே இல்லை
மனம் நொந்த பிறகே
முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்
என்னை ஏதோ செய்தாள்....
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
| Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி? |
download opera mini 5.1 (271 KB) download செய்த பிறகு Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள் ஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google search இல் nimzath என தேடி பார்க்கவும். |
அமெரிக்காவின் வடமாகாணக் காடுகளில் புதியவகை வெளவால் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
அருகி வரும் உயிரினங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்துவரும் ஆய்வாளர்கள் காட்டுக்குள் 13 நாட்கள் தங்கியிருந்து இவ்வகை வெளவால்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
இவை, ரினோலொபஸ் பிளெஸி என்ற விஞ்ஞானப் பெயர் கொண்ட வெளவால் இனத்தின் மற்றுமொரு பிரிவைச் சேர்ந்தவையாக இருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வகையான வெளவால்களை ஒத்த இனம் மேற்கு அமெரிக்கக் காடுகளில் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வடமாகாணக் காடுகளில் 27 வகையைச் சேர்ந்த 245 வெளவால் இனங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
الاشتراك في:
التعليقات (Atom)




