| எதிரியை சுட்டுக்கொல்லும் வண்டு-அதிசயம் ஆனால் உண்மை: (வீடியோ இணைப்பு) |
| புழு, பூச்சிகள், ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன. அதே சமயத்தில் ஒன்றிடம் இருந்து ஒன்று தப்பித்து வாழவும் இயற்கை அவற்றுக்கு வகை செய்திருக்கிறது. ஒவ்வொரு உயிரினத்துக்கும் நிறைய எதிரிகள் இருக்கின்றன. மனிதர்களைவிட பிராணிகள், பூச்சியினங்களின் வாழ்க்கைதான் போராட்டக் களமாக உள்ளது. இந்தப் பூச்சிகளுள் சிலந்தி, தன் இரையை மிகவும் தந்திரமாகப் பற்றுகிறது. வலையைப் பின்னிவிட்டு, எப்போது பூச்சி மாட்டிக்கொள்ளும் என்று சிலந்தி காத்திருக்கும். பின்னிய வலையில் பூச்சி வந்து மாட்டிக்கொண்டதும் ஒருவகை சிலந்தி, கப்பென்று பாய்ந்து கடித்து விடும். இந்த அவசர வகை சிலந்திக்கு `நெபிலியா’ என்று பெயர். சிலந்தி வலையில் அடிக்கடி அகப்பட்டுக் கொள்வது ஒரு வகைச் சில்வண்டு தான். சிலந்திகளிடம் இருந்து தப்பித்துக்கொள்ள இந்த வண்டுகளுக்கு ஒருவகை ஆற்றலை இயற்கை அளித்திருக்கிறது. இந்த வண்டுகளை `குண்டு வெடிக்கும் வண்டு’ என்று கூறுகிறார்கள். இந்த வண்டுகளின் வயிற்று அடிப்பாகத்தில் சிறிய சுரப்பி இருக்கிறது. அந்தச் சுரப்பியில் ஒரு வேதித் திரவமும், பிராண வாயுவும் சுரக்கின்றன. இந்த இரண்டும் சேர்ந்து வெடிக்கும் தன்மை கொண்டவை. சிலந்தி வலையில் இந்த வண்டு மாட்டிக்கொண்டதும், நெபிலியா வகைச் சிலந்தி அதைத் தின்ன உடனே பாய்ந்து போய் கவ்வும். ஆபத்தை அறிந்த வண்டு, தன் வயிற்றுப் பாகத்தைச் சிலந்தியின் பக்கம் திருப்பி, குறிபார்த்துச் சுரப்பியை வெடிக்கச் செய்யும். அந்த வெடிச் சத்தத்தை சிலந்தியால் தாங்க முடியாது. மேலும் காரமான ஒரு திரவமும் அதன் மீது பீய்ச்சப் படும். வெடிச்சத்தம், திரவ முழுக்கில் இருந்து சிலந்தி மீள்வதற்குள் அந்த வண்டு தப்பித்துப் போய்விடும். இந்த வகை ஆற்றல் இருப்பதால் `குண்டு வெடிக்கும் வண்டு’க்கு ஆபத்தோ, எதிரிகளோ அதிகம் இல்லை என்று சொல்லலாம். ஆனால், இதற்கும் ஓர் எதிரியை இயற்கை படைத்திருக்கிறது. இந்த வண்டை அவசரப்படாமல் சாமர்த்தியமாகப் பிடிக்கும் தன்மை கொண்ட இன்னொரு வகைச் சிலந்தி இருக்கிறது. அதற்கு `அர்கோபி’ என்று பெயர். |
நண்பன்
WELCOME FOR நண்பன்
الصفحات
السبت، 7 مايو 2011
الاثنين، 2 مايو 2011
பிரித்தானிய அரச குடும்பத்தின் திருமணத்தில் வேற்றுக் கிரகவாசிகள்(வீடியோ இணைப்பு)
Posted By king On May 1st 2011. Under விந்தை உலகம்
பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸின் திருமணத்தை காண்கின்றமைக்கு வேற்றுக் கிரகவாசிகள் வந்து இருக்கின்றனர் என்று நிபுணர்களால் சந்தேகிக்கப்படுகின்றது.அடையாளம் கண்டு பிடிக்க முடியாத பறக்கும் பொருட்கள் பல கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக ஆங்கில கால்வாய்க்கு மேலாக பறந்து திரிந்ததை பிரித்தானிய விமானிகள் அவதானித்து உள்ளனர்.
குறிப்பாக வெஸ்ட்மின்ஸ்ரர் மடத்துக்கு மேலான வான் பரப்பில் மர்மப் பொருள் ஒன்று பறந்து திரிந்ததற்கான தடயம் கிடைத்து உள்ளது.
பூமியில் இடம்பெறுகின்ற மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களை அவதானிக்கின்றமைக்கு வேற்றுக் கிரகவாசிகள் புறப்பட்டு வருகின்றமை பொதுவான விடயம் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
| பேஸ்புக்கின் புதிய வசதி: நாம் விரும்பும் இணைய பக்கங்கள் |
| [ செவ்வாய்க்கிழமை, 03 மே 2011, 04:03.12 மு.ப GMT ] |
இணையத்தில் உலாவும் போது கண்ணில் படும் தளம் நம்மை கவர்ந்தால் அதனை பேஸ்புக் உதவியோடு விருப்பமானதாக ஆக்கி கொள்ளலாம். பேஸ்புக் அறிமுகம் செய்த விருப்ப வசதி(லைக்) இதனை சாத்தியமாக்குகிறது. இப்படி தளங்களையும், இணைய பக்கங்களையும் விரும்புவதன் மூலம் அவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்பது விஷேசம். ஒரு விதத்தில் இது புக்மார்கிங் சேவை போல தான். இணையத்தில் உலாவும் போது கண்ணில் படும் இணையதளம் நம்மை கவர்ந்தால் அதனை உடனடியாக குறித்து வைத்து கொள்வோம் அல்லவா? இணைய யுகம் என்பதால் இப்படி தளங்களை குறித்து வைக்க காகிதத்தையோ நோட்டு புத்தகத்தையோ தேட வேண்டியதில்லை. இதற்காக என்றே புகமார்கிங் சேவைகள் இருக்கின்றன. இதே வசதியை பேஸ்புக் மிகவும் எளிமையாக்கி லைக் சேவையாக அறிமுகம் செய்தது. எந்த ஒரு இணைய பக்கம் பிடித்திருந்தாலும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள லைக் பட்டனை கிளிக் செய்து நமது விருப்பத்தை தெரிவிக்கலாம். இதன் விளைவாக இணையவாசிகள் அந்த தளம் பிடித்தமானதாக இருந்தால் விருப்ப பட்டனை கிளிக் செய்தாலே போதுமானது. அப்படியே அந்த தளம் அல்லது இணைய பக்கத்தை தங்கள் பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். அறிமுகம் செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே இந்த வசதி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தளங்களால் விரும்பி பயன்படுத்தப்பட்டது. இணையதளங்களை பொருத்தவரை இந்த வசதி சுலபமான விளம்பரமாக அமைந்தது. இணையவாசிகளை பொருத்தவரை தாங்கள் விரும்பும் பக்கத்தை பகிர்ந்து கொள்வதற்கான சுலபமான வழியாக இது அமைந்தது. ஆனால் இந்த லைக் சேவையில் உள்ள ஒரே குறைபாடு விருப்பம் தெரிவித்த பக்கங்களை சேமித்து வைப்பது சாத்தியமில்லை என்பது தான். எனவே எப்போதோ விரும்பினோமே என்று நினைத்து கோண்டு ஒரு பக்கத்தை தேட முற்பட்டால் அது சாத்தியம் இல்லை. இந்த குறையை போக்கும் வகையில் லைக் ஜர்னல் தளம் உதயமாகியுள்ளது. இந்த சேவையின் மூலமாக பேஸ்புக் பிரியர்கள் தாங்கள் விரும்பும் இணைய பக்கங்களை சேமித்து வைத்து கொள்லலாம். கருத்துக்கள் மற்றும் வீடியோவோடு ஒரே இடத்தில் வைத்து கொள்ளலாம். பின்னர் எப்போது தேவையோ அவற்றை தேடிப்பார்க்கலாம். இந்த இணைப்புகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம். ஆனால் ஒன்று மற்ற பேஸ்புக் சார்ந்த சேவை போல் இதனை பயன்படுத்த வேண்டும் என்றால் ஒருவரது பேஸ்புக் பக்கத்தினுள் நுழைவதற்கான அனுமதியை இந்த தளத்திற்கு வழங்க வேண்டும். |
الأحد، 1 مايو 2011
|
| உணவில் காரத்தை குறைத்தால் எடை குறையும் |
| [ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 11:26.31 மு.ப GMT ] |
பசி ஏற்பட்டால் அளவுக்கு அதிகமான அளவு உணவு சாப்பிடுவது வழக்கம். அதனால் உடல் எடை அதிகரித்து பல்வேறு நோய்கள் வந்து சேரும். பொதுவாக சதை போட விரும்பும் ஒல்லியானவர்கள் உணவுக்கு முன் பசியைத் தூண்டும் பானங்களை குடிப்பதுண்டு. அதற்கு நேர்மாறாக உடல் பருமனாக இருப்பவர்கள் உணவின் அளவைக் குறைக்க இயற்கையான வழி குறித்து இங்கிலாந்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 6 வாரங்கள் நடைபெற்ற இந்த ஆய்வில் சராசரி எடை கொண்ட 25 பேரில் மசாலா உணவு ரசிகர்கள், அதற்கு எதிரானவர்கள் என 2 குழுவினர் தெரிவு செய்யப்பட்டனர். மசாலா உணவு விரும்பிகளுக்கு 1.8 கிராமும், விரும்பாதவர்களுக்கு 0.3 கிராம் சிவப்பு மிளகாய் தூள் உணவுக்கு முன் தரப்பட்டது. 6 வாரங்களுக்கு பிறகு நடந்த சோதனையில் மிளகாய் தூள் குறைவாக சேர்த்தவர்களுக்கு பசி குறைந்ததும், அதிகம் சேர்த்தவர்களுக்கு பசி அதிகரித்ததும் தெரியவந்தது. பொதுவாக உடல் சூட்டை மிளகாய் தூள் அதிகரித்து அதிக கலோரிகளை இழக்கச் செய்வதால் அதிகமான அளவு பசி ஏற்படும். இதை மிளகாயில் உள்ள "கேப்சைசின்" என்ற பொருள் செய்கிறது. மிளகாய் தூளின் அளவு குறைந்தால் பசி குறையும். அத்துடன் உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு முறை ஆகியவற்றின் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும் என்று லண்டன் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர். |
الاشتراك في:
التعليقات (Atom)